fbpx

ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமான சிவன் கோவில்.. குகையில் இருக்கும் அதிசய பெட்டகம்..!! இத்தனை சிறப்புகளா..?

ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சிவன் கோவில் ஆஸ்திரேலியாவில் ரம்மியமாக அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழ்ந்து, பச்சை பசேலென் அமைதியான சூழலில் அமந்துள்ளது,. இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோவில் இது. 1997ல் இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999ல் மஹாசிவராத்திரி அன்று ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின.

கருவறைக்கு இருபுறமும் மாதா மந்திர், ராம் பரிவார் மந்திர் மற்றும் பக்கச் சுவர்களில் கணேஷ் மந்திர், ஆஞ்சநேய மந்திர் உள்ளனர். இவை பளிங்கு கல்லினால் ஆனவை. முக்தி குப்தேஸ்வரர் கோவில்” என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்ற வகையில் மிளிரும் வண்ண விளக்குகள் காண்போரை பக்தி பரவசத்துக்குள்ளாக்குகிறது.

இந்த கோயிலில், நம் ஊரில் உள்ள கோயிலைப் போன்று கருவறை இல்லாமல், திறந்த வெளி போன்று உள்ளது. கருவறைக்கு இருபுறமும் மாதா கோயில், ராம் பரிவார் கோயில்மற்றும் பக்கச்சுவர்களீல் விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளன. இவை அனைத்தும் பளிங்கு கல்லால் ஆனவை. இந்த கோயிலில் உலகிலேயே முதன் முதலாக உருவாகப்பட்ட பளிங்கு கல்லால் ஆன 4.5 மீட்டர் உயரமுள்ள சிவன் சிலை இக்குகை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த குகை கோவிலினுள் 1,128 சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் உள்ள இரண்டு மில்லியன் சிவபக்தர்கள் சேர்ந்து எழுதிய ஓம் நமசிவாய என்ற மந்திரம் அடங்கிய ஒரு பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் வைத்து அதன் மீது இம்மூலவர் சன்னிதியை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். உலகின் பல புண்ணிய நதிகளின் நீர், ஐம்பெரும் கடல் நீர், எட்டுவித உலோகங்களும் இதனுடன் அடங்கி உள்ளனவாம். அமைக்கப்பட்டுள்ளன.

Read more ; ‘சமரசமின்றி பணி தொடரட்டும்..’ சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!!

English Summary

A wonderful Shiva temple in Australia.. so special..?

Next Post

அச்சுறுத்தும் முயல் காய்ச்சல்!. 56% பாதிப்பு அதிகரிப்பு!. நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை!. துலரேமியா என்றால் என்ன?. அறிகுறிகள் இதோ!.

Mon Jan 6 , 2025
Terrifying rabbit fever!. 56% increase in incidence!. Centers for Disease Control warns!. What is tularemia?. Here are the symptoms!.

You May Like