கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிபின் (35). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பரவூரை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு அந்த இளம்பெண் ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது, சிபின் அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்பெண்ணின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அவரை சிபின் ஊருக்கு வரவழைத்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும், அவரிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சிபின் பெற்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த பெண், பரவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிபினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.