fbpx

35 துண்டுகளாக வெட்டப்பட்டு இளம்பெண் படுகொலை!… டெல்லியை அடுத்து காஷ்மீரில் பயங்கரம்!… பொதுமக்கள் அச்சம்!

ஜம்மு காஷ்மீரில் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜம்முவின் சொய்புக் புட்காமைச் சேர்ந்த தன்வீர் அகமது கான். இவரது 28 வயது சகோதரி ஒருவர் கடந்த 8ம் தேதியிலிருந்து காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணை காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஷபீர் என்பவர் பக்கம் காவல்துறையினர் கவனம் திரும்பியுள்ளது. ஷபீர், திருமண புரோக்கர் வேலை செய்துவருவதாகவும், அதனடிப்படையில் தன்வீர் அகமதுவின் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து, தன்வீர் தனது சகோதரிக்கு மாப்பிள்ளை தேடிவந்தநிலையில், ஷபீர் ஒரு இளைஞரின் புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஷபீருக்கும், தன்வீரின் சகோதரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒருதலையாக காதலித்து வந்த ஷபீர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து, ஷபீருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதை எதிர்பார்க்காத ஷபீர் இது தொடர்பாக இளம்பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார். சண்டை தீவிரமடைந்த நிலையில், இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்தியுள்ளனர். பின்னர் கடந்த 8ம் தேதி ஷபீர் தன்வீரின் சகோதரியை செல்போனில் அழைத்து தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு இளம்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் இதுதான் கடைசி முறை என்றும், இதன் பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் ஷபீர் கெஞ்சியுள்ளார்.

இதனையடுத்து தன்வீரின் சகோதரியும் இதற்கு ஒப்புக்கொள்ள 8ம் தேதி மதிய வேளையில் ஷபீரின் வீட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷபீர், அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளம்பெண் மறுக்கவே இருவருக்கு இடையில் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர், கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தியதாகவும் இதனால் நிலைகுலைந்துபோன அவர், உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து, இளம்பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை அருகில் இருந்த காட்டில் புதைத்திருக்கிறார். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் காவல்துறையினர் தற்போது ஷபீரை கைது செய்துள்ளனர்.

Kokila

Next Post

H3N2 காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா..? மரணத்தை ஏற்படுத்துமா..? நிபுணர்கள் சொன்ன பதில் இதுதான்..

Mon Mar 13 , 2023
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த […]

You May Like