வயதான பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்ணை, வீட்டின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கூட்லு பகுதியைச் சேர்ந்தவர் பரசிவமூர்த்தி (45). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வசித்து வரும் தனது வயதான தாய், தந்தையை கவனித்து கொள்ள வில்சன் கார்டனில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு ஆள் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். அந்நிறுவனம் 21 வயது இளம்பெண் ஒருவரை வேலைக்கு அனுப்பியுள்ளது. அந்த இளம் பெண்ணும் வயதானவர்களை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் தனிமையில் இருந்த அந்த இளம்பெண்ணை பரசிவமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமும் கூற கூடாது என மிரட்டியுள்ளார்.

இதனால், சில காலம் அமைதியாக இருந்த இளம்பெண் இச்சம்பவம் குறித்து தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தினரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை சொல்லி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் பரசிவமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.