சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது தாய் – தந்தையை இழந்த நிலையில், தங்கையுடன் தண்டையார் பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர், அங்கிருந்து கல்லூரிக்கும், பார்ட் டைமாக வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளடைவில் இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர்.
ஆனால், தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தினேஷை காதலிக்கலாமா..? வேண்டாமா..? என்ற யோசனையில் இருந்து வந்துள்ளார் இளம்பெண். ஆனால், தினேஷின் வற்புறுத்ததால், அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்து வந்துள்ளார். பின்னர், தினேஷின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்று வந்துள்ளார். அப்போது தான், இளம்பெண்ணிடம் ’நாம் இருவரும் தான் திருமணம் செய்யப்போகிறோம்.. இதனால் நாம் உல்லாசமாக இருக்கலாம்’ என்றெல்லாம் கூறி ஆசையாக பேசியுள்ளார்.
இதற்கு இளம்பெண்ணும் சம்மதித்ததால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே, இருவரும் ஊர் சுற்றுவதை பார்த்த இளம்பெண்ணின் மாமா, இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணையும், அவரது தங்கையையும் தாம்பரத்தில் குடிவைத்தார். மேலும், இனி தினேஷுடன் பேசக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இதனால், அந்த இளம்பெண் தினேஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், கொஞ்சம் கூட வருத்தப்படாத தினேஷ், வேறு சில பெண்களை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த 2024இல் இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரிடம் நலம் விசாரிப்பது போல, தினேஷ் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது, தான் காதலித்த பெண் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும், என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்றும் நம்ப வைத்துள்ளான். இதனால், இளம்பெண் மீண்டும் தினேஷின் வலையில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துள்ளான் தினேஷ். கேரளாவுக்கு சுற்றுலா செல்வது போல, அங்கு ஒரு வாரத்திற்கு ரூம் எடுத்து உல்லாசமாக இருந்துள்ளான். இப்படியாக பல இடங்களுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளான். இந்நிலையில், அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதுகுறித்து தினேஷிடம் தெரிவித்தபோது, இளம்பெண்ணை கெட்டவார்த்தைகளால் திட்டி விரட்டி அடித்துள்ளார்.
இதனால், மிகவும் மனமுடைந்து போன பெண், தனது கருவை கலைக்க முயற்சித்துள்ளார். மேலும், தினேஷின் அப்பா – அம்மாவும் அந்த இளம்பெண்ணை கொச்சையாக பேசி காயப்படுத்தி உள்ளனர். இதனால், அவர் காவல்நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்தார். ஆனால், காவல்நிலையம் சென்ற அவரை போலீசார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், காவல் நிலையத்திலேயே இளம்பெண்ணின் கரு கலைந்து, ஆடை முழுவதும் ரத்த கறையாகியுள்ளது.
இதையடுத்து, இளம்பெண் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதததால், எஃப்.ஐ.ஆர் பெற்று வரும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இளம்பெண்ணை இழுத்தடித்து வந்துள்ளனர். பின்னர், வெப்பேரி போலீஸ் கமிஷனரிடம் சென்ற நிலையில், தண்டையார்பேட்டை ஸ்டேஷனில் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளார். அங்கு புகாரளிக்க சென்றால், அங்கிருக்கும் போலீசார் இளம்பெண்ணை தகாத வார்த்தகளால் வசைபாடியுள்ளனர். ’நீயும் தானே அவன் கூட சேர்ந்து படுத்த’ என்கிற ரீதியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, காதலன் தினேஷுக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர், நீ என்னவேனா பண்ணிக்கோ.. இரண்டே நாள்ல ஜாமின்ல எடுத்துருவேன்’ என்று மிரட்டியுள்ளார். தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல், இளம்பெண் தனியாக தவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா..? கேள்வி எழுந்துள்ளது.