இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
புனே மாவட்டத்தின் டெக்கான் பகுதியில் ஒரு எருமை மாடு மேய்ச்சலில் இருந்துள்ளது. அப்போது அங்கு வந்த நபர், எருமையை மறைவான இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து எருமையுடன் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். எதேச்சையாக அவ்வழியாக சென்ற சிலர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அங்கிருந்து நழுவும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக வாக்குவாதம் செய்துள்ளார். இதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிய நிலையில், வாக்குவாதம் செய்த அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அந்த நபர் நிலை குலைந்து விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 38 என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபர் மீது சட்டப்பிரிவு 377-இல் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.விலங்குடன் ஒரு நபர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொண்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.