குளிக்கச் சென்ற இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி காவல்நிலையத்திற்கு உட்பட்ட லே-அவுட்டில் 20 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம் (24) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு இளம்பெண் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் குளித்து முடித்து விட்டு குளியலறையின் வெளியே வந்தபோது, வெளியே காத்திருந்த மன்சூர், இளம்பெண்ணை தன்னுடைய வீட்டிற்குள் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று, தன்னுடைய வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
பொதுமக்கள் திரள்வதை அறிந்து, வீட்டிலிருந்து வெளியேறி தப்பிச் சென்ற மன்சூரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, மன்சூரை கைது செய்த போலீசார், இது குறித்து நடத்திய விசாரணையில், மன்சூர் ஆலம் ராமநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான இளம்பெண் ரத்த காயங்களுடன் இருந்த நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மத்திய பாஸ்போர்ட் அமைப்புகளில் வேலை..!! காலிப்பணியிடங்கள் நிறைய இருக்கு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!