fbpx

பற்கள், தாடி, கழுத்து மூன்றையும் வைத்து Guinness சாதனை படைத்த இளைஞர்!…

உக்ரைனை சேர்ந்த இளைஞர், தனது தாடி, பற்கள், கழுத்து ஆகியவற்றின் உதவியுடன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். இதிலும், கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர், அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனை சேர்ந்தவர் Dmytro Hrunsky இளைஞர் தனது உடலின் மூன்று வெவ்வேறு பாகங்களைப் பயன்படுத்தி ஒரே நாளில் மூன்று புதிய உலக சாதனைகளைப் படைத்தார்.

Dmytro Hrunsky, தனது தாடியின் உதவியுடன் 2,580 கிலோ எடையுள்ள வண்டியை இழுத்து சாதனை படைத்துள்ளார். ஒருவர் தாடி மூலம் அதிக எடை கொண்ட கனமான வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்தது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இத்தகைய சாதனையை செய்ய முயற்சித்தபோது Dmytro Hrunsky-வின் தாடி முடி வேரோடு பிடுக்கப்பட்டது.

இதேபோல், Dmytro Hrunsky தனது கழுத்தின் உதவியுடன் ஒரு டிரக்கை இழுத்தார். இந்த டிரக்கின் எடை 7,759 கிலோ ஆகும். இந்த டிரக்கை சுமார் 5 மீட்டர் வரை இழுத்ததன் மூலம் உலகிலேயே முதன்முறையாக தனது கழுத்தை வைத்து இப்படி ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார் என்ற பெருமையை பெற்றுள்ளார். 3வது சாதனையாக, தனது பற்களின் உதவியுடன் மொத்தம் 7 கார்களை இழுத்து அசத்தியுள்ளார். இந்த காட்சியை அங்கு நின்றிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Dmytro Hrunsky கின்னஸ் புத்தகத்தில் ஒரே நாளில் மூன்று பட்டங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: Tasmac | ’இனி ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் தரக்கூடாது’..!! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!

Kokila

Next Post

Election | ’தேர்தல் தீர்ப்பே மாறுதே’..!! ’அப்படினா அதெல்லாம் பொய்யா கோபால்’..!! ஏபிபி வெளியிட்ட சர்வே முடிவு..!!

Wed Mar 13 , 2024
தமிழ்நாட்டில் திமுக அதிமுகதான் இப்பவும் கிங். பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க எல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஏபிபி – சிவோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு […]

You May Like