சிறுவனை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்ட 27 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் 16 வயது மாணவன். இவருடைய வீட்டிற்கு அருகில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் வெளியூரில் ஓட்டுநராக வேலை பார்த்து வருவதால், எப்போதாவது தான் ஊருக்கு வந்து செல்வார்.
இதற்கிடையே, அந்த இளம்பெண்ணுக்கு அந்த மாணவர் உறவினர் ஆவர். இதனால், அப்பெண்ணின் வீட்டிற்கு மாணவன் அடிக்கடி சென்று வந்துள்ளான். சிறுவன் வீட்டிற்கு இளம்பெண் வருவதையோ, சிறுவன் இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்வதையோ யாரும் தவறாக நினைக்கவில்லை. இந்நிலையில், அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மாணவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மாணவனிடன் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது, உறவினரான அந்த இளம்பெண் கடந்த 3 மாதங்களாக தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு செய்து வந்ததாக கூறியிருக்கிறார். அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொண்டது குறித்தும் சிறுவன் கூறியுள்ளான்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிளஸ் 1 மாணவனை மிரட்டி உல்லாசமாக இருந்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.