கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதற்கிடையே, ஷாரோன் ராஜ் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு தனது காதலன் ஷரோன் ராஜா கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.