fbpx

கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையை வாழை மரத்தடியில் புதைத்த இளம்பெண்..? திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண், கணவரை பிரிந்து தனது 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை கொன்று வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தான் குழந்தையை கொல்லவில்லை என்றும், 3 மாதத்தில் கருக்கலைப்பு ஏற்பட்டதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும், அதனை வீட்டின் அருகே புதைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்க்க போலீசார் முடிவு செய்தனர். அந்த இடத்தை இளம்பெண் போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

பின்னர் அங்கு திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் தமிழ்செல்வி, நத்தம் காவல் நிலைய போலீசார் ஆகியோர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள வாழைமரத்தின் அடிப்பகுதியில் தோண்டப்பட்டது. ஆனால், குழந்தை புதைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. இதனால் அந்த பகுதியில் கிடைத்த மண் மற்றும் புழுக்களை, மதுரை தடயவியல் துறையினர் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட் கொடுத்த மெட்டா நிறுவனம்..!! இனி 32 பேருடன் பேசலாம்..!!

Thu Jun 29 , 2023
வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது […]

You May Like