fbpx

போதை மருந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை!… சமூக வலைதளத்தில் பழகிய இளைஞர்களின் கொடூர செயல்!

இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.

டெல்லியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 2 வாலிபர்கள் பழக்கமாகினர். சம்பவத்தன்று அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு டெல்லியின் மதங்கீர் பகுதியில் உள்ள முக்கிய சாலைக்கு வரும்படி கூறினர். அதன்படி அந்த பெண் நண்பர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் இருவரும் தங்களுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படி இளம் பெண்ணை வற்புறுத்தினர். அதற்கு அவர் மறுக்கவே, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாலிபர்கள் மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர். இதை அறியாமல் அந்த உணவை உண்ட இளம் பெண் மயங்கினார். பின்னர் வாலிபர்கள் இருவரும் அவரை கற்பழித்தனர். அதை தொடர்ந்து இளம் பெண்ணை அப்படியே விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு திரும்பிய அந்த பெண் தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்து, கதறி துடித்தார். உடனடியாக அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்த அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இருந்த வாலிபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Kokila

Next Post

இந்த கடவுள்களின் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது.! ஏன் தெரியுமா.!?

Sat Feb 3 , 2024
பொதுவாக நம் வீட்டு பூஜை அறையில் பல கடவுள்களின் படத்தை வைத்து வழிபட்டு வருவோம். இவ்வாறு செய்யும்போது நமக்கு உடல் ஆரோக்கியமும், மன நிம்மதியும் வந்து சேரும். ஆனால் ஒரு சில கடவுளின் படங்களை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பதை குறித்து பார்க்கலாம்? பெரும்பாலான சிவபக்தர்கள் சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இவ்வாறு சிவன் தனியாக இருக்கும் […]

You May Like