Aadhaar: 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை மார்ச் 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்டணம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. இந்தநிலையில், 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற சூழலில், உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால், நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. அதை வீட்டிலேயே அப்டேட் செய்யலாம்.
Readmore: தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை!… சமூக பணியாற்றவே ஆர்வம்!… ரசிகர்கள் வரவேற்பு!