fbpx

Aadhar: இனி படிக்கும் பள்ளியிலே ஆதார் பதிவு செய்யலாம்…! தமிழக அரசின் அசத்தலான திட்டம்…!

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணக்கார்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தலை மேற்கொள்ள ஏதுவாக ஆதார் பதிவு” சிறப்பு முகாம்கள் பள்ளிகளிலேயே இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இம்முகாமினைப் பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English Summary : Aadhaar can be registered in the school you are studying from now on

Vignesh

Next Post

Anbil mahesh: அடிதூள்!… எதிர்கால பள்ளிக்கல்வியை வழிநடத்த கொண்டுவரப்படும் மெகா மாற்றம்!… அமைச்சர் அதிரடி பேச்சு!

Wed Feb 28 , 2024
Anbil mahesh:எதிர்கால பள்ளிக்கல்வியை உருமாற்றவும், வழிநடத்தவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். சென்னை அடுத்த சிறுசேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நமது பள்ளிக் கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவில் நம் குழந்தைகளை எப்படி இணைத்துக் கல்வி கற்பிக்க போகிறோம் என்பதை நாம் […]

You May Like