ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது டெமோகிராபி (பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி), பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒருவர் தனது சாதி, மதம் அல்லது மொழியைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்/சேவைகளைப் பெற உதவுகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவினில் பால் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் இதனால், அட்டைகள் மூலம் பால் வாங்கும் படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேர்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.