நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே, பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும்போது ஆதார் எண்ணை கட்டாயம் சரிபார்த்து பதிவேற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறப்பு சான்றிதழுக்கு தாய், தந்தையின் ஆதார் எண்ணும், இறப்பு சான்றிதழ் வழங்கும்போது உயிரிழந்தவரின் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.