fbpx

பெற்றோர்களே கவனம்…! பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆதார்…! என்ன காரணம்…?

நடத்துனர்களுக்கு பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் எழும் பட்சத்தில் பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசப் பயணம் திட்டம் உள்ளது. இதுவரை, மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இது அனுமதிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 5 வயதாக உயர்த்தப்பட்டது.

அதே போல SETC, சென்னை மாநகர பேருந்து மற்றும் TNSTCயின் ஆறு மாநகராட்சிக்கு பொருந்தும். எட்டு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் 19,500 பேருந்துகளிலும் இது பொருந்தும். ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை இலவசமாக பயணம் செய்ய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும். 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து 50% டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டும்.

பல இடங்களில் நடத்துனர்களுக்கு குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் எழுந்து வந்தது. இந்த நிலையில் நடத்துனர்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில் பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஆதார் அட்டையை பேருந்தில் பயணம் செய்யும்போது எழுத்துச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Vignesh

Next Post

தங்கம் விலை உயர்வுக்கு சீனா காரணமா? விலை குறைய வாய்ப்பில்லை?

Sun May 12 , 2024
அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார். தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 ரூபாய் விலை உயர்ந்து 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. மே 11ஆம் தேதி ரூ.20 […]

You May Like