fbpx

’ஆதார் ரொம்ப முக்கியம்’..!! ’அதைவிட இது ரொம்ப முக்கியம்’..!! அடிக்கடி மாற்ற முடியாது..!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. 12 இலக்க எண்கள் கொண்ட ஆதாரில் உங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைரேகை என அனைத்தும் கொண்டிருக்கும். ஆதார் பல்வேறு துறைகளுக்கு அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை என அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிறது.

எனினும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், ஆதார் மையம் சென்று உரிய ஆவணங்கள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில், குறிப்பிட்ட 2 விவரங்கள் அடிக்கடி மாற்ற முடியாது. அது பிற சிக்கல்களை எழுப்பும். அதாவது உங்கள் பெயர், பிறந்த தேதியை அடிக்கடி மாற்ற முடியாது. ஒரு முறை ஆதார் பதிவு செய்யும் போதே பெயரின் எழுத்துகள், initials என அனைத்தையும் சரியாக குறிப்பிட வேண்டும். initials வர வேண்டிய இடமும் சரியாக கொடுக்க வேண்டும். இதே பெயர் மற்ற அரசு ஆவணங்களிலும் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல், ஆதாரில் பிறந்த தேதி தவறாக இருந்தால், அதை கட்டாயம் மற்ற ஆவணங்களுடன் குறிப்பிட்டு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தையை பள்ளியில் சேர்த்த பிறகு, பெற்றோர்கள் அதை மாற்றியமைக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அடுத்து பொதுத்தேர்வு, போட்டித் தேர்வின் போது சிலர் இதை மாற்ற வேண்டும் எனக் கூறுவர்.

இந்த விவரத்தையும் நாம் அடிக்கடி மாற்ற முடியாது. எனவே, முதலில் பதிவு செய்யும் போதே சரியான தகவல்களை கொடுத்து சிரமத்தை தவிர்ப்பது நல்லது. ஆதாரில் பெயர், பிறந்த தேதி மாற்றுவது மற்ற விவரங்கள் மாற்றுவதை விட சற்று கடினமான வேலையாகும். ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் எப்போதும் சரியானதாகவும், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட விவரங்களாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

பத்திரப்பதிவில் வந்த புதிய நடைமுறை..!! இன்று முதல் அமல்..!! மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Dec 1 , 2023
தமிழ்நாட்டில் தற்போது உள்ள நடைமுறைப்படி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் இனி பிரிக்கப்படாத பாக மனை நிலத்தை தனி ஆவணமாகப் பதிவு செய்ய முடியாது. பழைய நடைமுறை என்பது இனி, பிரிக்கப்படாத […]

You May Like