fbpx

ஆதார் கார்டு வெச்சிருக்கீங்களா..? அப்படினா உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி இம்மாதம் தொடங்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 ஆண்டுகளாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தியுள்ளது. ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

அதேபோல் குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். அதன்படி, தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல், சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன.

அதை மாற்ற நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க செய்ய வசதியாக விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை பறிக்க முடிவு செய்துள்ளாராம். ஆதார் அட்டை போலவே, இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

Read More : அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு..!!

English Summary

The deadline for correction of Aadhaar details has been extended till September 14.

Chella

Next Post

இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதலா?. லடாக்கில் பதற்றம்!. உண்மை என்ன?.

Tue Aug 13 , 2024
Indian Army denies fresh clashes with China’s PLA troops at LAC in eastern Ladakh, rubbishes claims on social media as fake news

You May Like