fbpx

ஆதார் – பான் இணைப்பு..!! அபராதம் மேலும் உயர்வு..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

இந்திய மக்கள் அனைவரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீட்டித்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இலவசமாக இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஆதார் மற்றும் பான் இணைப்புக்கு 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் முதல் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய கால அவகாசமும் முடிந்துவிட்டால் அபராத தொகை மேலும் உயரும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சை..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் அம்பலம்..!!

Fri Apr 7 , 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 24ஆம் தேதியன்று வெளியானது. தற்பொழுது, குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த சங்கரன்கோவில் பகுதியில் இருந்து தட்டச்சு பணியிடங்களுக்கு […]

You May Like