fbpx

ஆதார் அப்டேட்!… கடைசி தேதி வந்தாச்சு!… இனிமேல் நீட்டிக்க வாய்ப்பில்லை!… உடனே பண்ணிடுங்க!

Aadhaar Update: ஜூன் 14ஆம் தேதிக்குள் உங்களுடைய ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய வாய்ப்பு உள்ளது. இன்னும் 9 நாட்கள்தான் இருப்பதால், அதன் பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டை என்பதால் அதை அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது பல அரசு மற்றும் அரசு சாரா பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அதை அப்டேட் செய்வது நல்லது.

ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. முதலாவது- My aadhaar போர்டல். இரண்டாவது- அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையம். இங்கு செல்வதன் மூலம் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர், புகைப்படம், மொபைல், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும். ஆனால் ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றால் அப்டேஷனுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். போர்ட்டல் மூலம் நீங்களே அப்டேட் செய்தால் பணம் செலுத்த வேண்டியதில்லை.

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் ஆதார் கார்டை அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாதம் தான் அவகாசம் உள்ளது. அதன் பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் ஆதார் கார்டை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால் உடனே அதைச் செய்யலாம். 10 ஆண்டுகள் பழமையான ஆதார் கார்டில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஆதார் அமைப்பு (UIDAI) ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இலவச ஆதார் அப்டேட்டுகான காலக்கெடு இதற்கு முன் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜூன் 14ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

இலவச ஆன்லைன் ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்ததும் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். ஆதாரை புதுப்பிப்பதற்கு அங்கே கட்டணம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100, தனிநபர் தரவுகளுக்கு ரூ.50, ஆன்லைனில் ஆதார் டவுன்லோட் செய்ய ரூ.30, முகவரியை புதுப்பிப்பதற்கு ரூ.25 மற்றும் முகவரியை புதுப்பிக்க ரூ.50 என்ற அளவில் பணம் செலுத்த வேண்டும்.

Readmore: தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் ஷர்மா!… அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பெருமை!

Kokila

Next Post

வங்கி அதிரடி முடிவு...! யுபிஐ பண பரிவர்த்தனைக்கு ஜூன் 25 முதல் புது ரூல்ஸ்...!

Thu Jun 6 , 2024
The lender informed its customers through emails that they would continue to receive email alerts for all UPI transactions

You May Like