ஆதார் அட்டையில் 5 முதல் 15 வயதுவரை குழந்தைகளின் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய யுஐடிஐ வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ’பால் ஆதார்’ எனப்படும் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் எனவும் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் தகவல்களை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
டுவிட்டரில் இது தொடர்பாக வெளியான தகவலில் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகள் தகவல்களை அப்டேட் செய்வதற்கு கட்டணம் கிடையாது. குழந்தைகளின் ஆதார் எண்களில் எந்த மாற்றமும் தேவைப்படாது. ஒரே எண்ணை தொடர்ந்து பயன்படுத்தலாம். பெற்றோர்கள் அருகில்உ ள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று மயோமெட்ரி டேட்டாவை அளிக்கலாம்.
முதல் பயோமெட்ரி தகவல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எடுக்க வேண்டும். அடுத்தகட்டமாக 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வெவ்வேறுநலத்திட்டங்களை பெற, பலன்களை பெற கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தகவல் பிறப்பு சான்றிதழ் கொண்டு அப்டேட் செய்யப்படுகின்றது.
கைவிரல் ரேகை போன்ற பயோ மெட்ரி தகவல்கள சிலர் 5 வயதைக் கடந்தும் அப்டேட் செய்யாமல் உள்ளனர். எனவே கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றை பால் ஆதார் அட்டையில்அப்டேட் செய்ய வேண்டும்என்பது அவசியமாகக்ப்பட்டுள்ளது. எனவே 5 வயதை அடைந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அவசியம் பதிவை மாற்ற வேண்டும்.
நீல நிற அட்டை என்றால் என்ன? நீல நிற அட்டை பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது. 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்நிறத்தில் வழங்கப்படுகின்றது. இருப்பினும் 5 வயதை அடைந்தவுடன் இந்த அட்டைகள் செயலிழந்ததாக கருதப்படும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் தகவல்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டது போல கட்டாயம் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும்.
எவ்வாறு பால் ஆதார் அட்டை விண்ணப்பிக்க வேண்டும்
- uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- ஆதார் அட்டை பதிவு என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்- குழந்தையின் பெயர், பாதுகாவலர் அல்லது பெற்றோர் பெயர், செல்போன் எண், பிற பயோமெட்ரி தகவல்கள்
- அடுத்ததாக முகவரி, மாநிலம் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்
- பின்னர் சமர்ப்பிக்கவும்
- அருகில் உள்ள ஆதார் மையத்தை ஆன்லைனில் தேர்வு செய்து அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு பின்னர் மையத்தை அணுகவும்.
- அடையாள அட்டை, முகவரிக்கான அடையாள அட்டை, குழந்தையுடன் என்ன உறவு என்பதற்கான அத்தாட்சி சமர்ப்பிக்க வேண்டும்.
- 60 நாட்களில் போஸ்டல் மூலம் உங்களுக்கு அடையாள அட்டை கிடைத்துவிடும்.