இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் எவரேனும் தங்களது அதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் நாளது வரை இணைக்காமல் இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
எனவே மேற்காணும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குசாவடி நிலையங்களில் தங்களுடைய ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை படிவம் 6B -யில் பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.