fbpx

தீபாவளிக்கு தயாரான ஆவின் இனிப்புகள்..!! அக்.10 முதல் விற்பனை..!! விலை எவ்வளவு தெரியுமா..?

ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, ஐஸ் கிரீம் உள்ளிட்ட பல பால் பொருட்களை தயார் செய்து வருகிறது. இது, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்தாண்டு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தாண்டு தீபாவளிக்கும் கீழ்க்கண்ட இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.

காஜூ கட்லீ (250 கிராம்) – ரூ.260

நட்ஸ் அல்வா (250 கிராம்) – ரூ.190

மோத்தி பாக் (250 கிராம்) – ரூ.180

காஜூ பிஸ்தா ரோல் (250 கிராம்) – ரூ.320

நெய் பாதுஷா (250 கிராம்) – ரூ.190

மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அரை கிலோ ரூ.450 என்ற விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நெய்யினால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இந்த இனிப்பு வகைகள் வரும் அக்.10ஆம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’கந்தசாமி’ திரைப்பட பாணியில் தொடரும் ஐடி ரெய்டு..!! கலக்கத்தில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன்..!!

Sat Oct 7 , 2023
சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். […]

You May Like