fbpx

Aavin vs Amul..!! ஆவின் நிறுவனத்திற்கு ஆப்பு வைக்கும் அமுல் நிறுவனம்..!! பால் உற்பத்தியாளர்கள் கவலை..!!

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளதால், ஆவினுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத்தின் ‘அமுல்’ நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது.

கொள்முதல் செய்யப்பட்ட பாலை பெங்களூருவில் விநியோகிக்கவும், பால் கொள்முதல் அதிகரிக்கும்போது தமிழ்நாட்டில் விநியோகிக்கவும் அமுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் அதிகம் வழங்கப்படும் என்றும், உடனடியாக கொள்முதல் தொகை வழங்கப்படும் என்றும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இதனால், பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆவின் கொள்முதல் தொகையை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்கினால், உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திடம் செல்லமாட்டார்கள் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Wed May 24 , 2023
கோடைகால சீசனில் மாம்பழ விற்பனை களைகட்டி வருகிறது. மக்களின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய மாங்காய்களை கூடிய விரைவில் பழுக்க வைத்து உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் நினைக்கின்றனர். இதனால், ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவான விளைவுகள் : ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான […]
ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like