fbpx

ஆவின் பால்..!! இனி செல்போன் இருந்தால் போதும்..!! வெளியானது சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் காகிதம் இல்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக பால் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்த பின் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு பால் அட்டை உரிமைக்கான ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அது சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கான பால் வகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, நுகர்வோர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று இணையதளம் மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெறலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

டோக்கன் பெறாதவர்களுக்கு ரூ.6000 எப்போ கிடைக்கும்?… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

Tue Dec 19 , 2023
டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டியது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.. முதல் நாளன்று கடல் சீற்றம் காரணமாக மழை வெள்ளத்தைக் கடலும் உள்வாங்கவில்லை.. இதனால் அனைத்து பகுதிகளிலும் முதல் நாளில் மழை நீர் தேங்கியது. துளியும் மழை நீர் வடியவில்லை. அதன் பின்னர் முக்கிய சாலைகளில் மறுநாளே மழை நீர் […]

You May Like