விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சத்தியநாராயணா சினிமா தயாரிப்பாளரான இவருடைய வீடு விசாகப்பட்டினம் அருகே உள்ள ருசிகொண்டாவில் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய நாராயணா வேலை விஷயமாக ஹைதராபாத் வரையில் சென்று வந்த சூழ்நிலையில், நேற்று காலை அவருடைய வீட்டிற்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து சத்திய நாராயணாவின் மனைவி ஜோதியை கடுமையாக மிரட்டி உள்ளனர். அப்போது உன்னுடைய ஆடிட்டரை இங்கே உடனடியாக வரச் சொல் என்று மிரட்டி இருக்கிறார்கள் அந்த கும்பலை சார்ந்தவர்கள்.
அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்த சத்தியநாராயணாவின் மனைவி உடனடியாக ஆடிட்டரை அங்கு வரவழைத்தார். இதனை அடுத்து சத்திய நாராயணன் மனைவி ஜோதி அவருடைய மகன் மற்றும் ஆடிட்டர் வெங்கடேஸ்வரரா உள்ளிட்டோரை ஒரு காரில் ஏற்றிய அந்த கும்பல் அங்கிருந்து கடத்திச் சென்றனர். காரில் வைத்து உன்னுடைய கணவனுக்கு போன் செய்து 50 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்து கொடுக்கச் சொல் என்று அவர்கள் ஜோதியிடம் மிரட்டி உள்ளனர்.
சத்தியநாராயணா மனைவி ஜோதி தன்னுடைய கணவனுக்கு போன் செய்து நடைபெற்ற சம்பவங்களை சொல்லி 50 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய நாராயணா உடனடியாக விசாகப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை உடனடியாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரின் கடத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆடிட்டர் உள்ளிட்டோரை தீவிரமாக தேடும் பணிகள் ஈடுபட்டனர் அப்போது சிக்னல் அடிப்படையில் அவர்கள் அனந்தபுரம் நோக்கி கார் சென்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து அனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் காரை மடக்கி பிடிக்க தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
இதற்கு நடுவே தங்களை காவல்துறையினர் விரட்டி வருவதை அறிந்து கொண்ட அந்த கடத்தல் கும்பல் அவர்கள் மூவரையும் அனந்தபுரம் அருகே சாலையில் இறக்கிவிட்டு தப்பி சென்றது. இதுபோன்று பணத்திற்காக கடத்துவது, காவல்துறையினர் பின் தொடர்ந்து வந்தால் கடத்தப்பட்ட நபர்களை சாலையில் இறக்கிவிட்டு செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் பிரபல ரவுடி ஹேமத்தின் செயல் தான் இது என்று காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, அனந்தபுரம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். ரவுடி கேமன் அவருடன் இருந்த மேலும் 3 பேர் உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர் விசாகப்பட்டினம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.