திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ”பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதுதான் உங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கமும் கூட. இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு திரும்பி பார்க்கின்றன. பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால்தான் நமது நாடும் சிறந்து விளங்கும்.
கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம் நல்லிணக்கத்தையும் வளர்ப்பது அவசியம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை கல்வியில் சிறந்து விளங்கியது“ என்று பேசினார்.