fbpx

வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்..! கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு உறுதி..! கடலூரில் 6 பேர் பாதிப்பு…!

கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு பொது மருத்துவமணையில் 26 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு சிகிச்சைக்கு பலர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்புக்கு என தனி வார்டு இல்லாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கையம் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

உயிரைக் கொல்லும் நிஃபா வைரஸை எப்படி கண்டறிவது..? அதை தடுக்க என்ன செய்யலாம்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Thu Sep 14 , 2023
கொரோனா வைரஸை தொடர்ந்து நிஃபா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி? பரவாமல் தடுப்பது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். நிஃபா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? மற்ற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளை, சிறுமூளை, நரம்பு […]

You May Like