fbpx

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்..! அரசு மருத்துவமனையில் 500 பேருக்கு சிகிச்சை..!

புதிய வகை வைரஸ் காய்ச்சலால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்..! அரசு மருத்துவமனையில் 500 பேருக்கு சிகிச்சை..!
கோப்புப் படம்

தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 250 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் நிரம்பிய நிலை காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Chella

Next Post

’கேப்டன் மில்லர்’ படத்தின் மாஸ் அப்டேட்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Thu Sep 22 , 2022
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல ஆண்டுகளாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் 1930 – 40களின் பின்னணியில் […]
’கேப்டன் மில்லர்’ படத்தின் மாஸ் அப்டேட்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

You May Like