fbpx

ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை ஏற்பு..! அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றிதோடு, இரு வாரங்களில் வழக்கை முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை ஏற்பு..! அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அதனை ஏற்று ஏற்கனவே இரண்டு முறை இதுதொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, புதிதாக வழக்கை விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (ஆகஸ்ட் 10) பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

”கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிறுத்தி வைத்த நிதியமைச்சர்”..! - செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

Mon Aug 8 , 2022
‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் […]
”கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிறுத்தி வைத்த நிதியமைச்சர்”..! - செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

You May Like