fbpx

லாரி மோதிய விபத்தில், சாலை ஓர ஓட்டல் காவலாளி பலி … பைக்கில் வந்தவரும் மரணம் .. கர்ப்பிணி படுகாயம்..

சிக்கபல்லாபுராவில் தாறுமாறாக வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல் காவலாளி மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுராவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரேசந்திரா காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் தாறுமாறாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கார்மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். இதனால், அங்கு அதே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதியது. நிற்காமல் சென்ற வாகனம் பிரணவ் என்ற ஓட்டல் முன்பு பணியில்  இருந்த காவலாளி மீது வேகமாக மோதிவிட்டு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அப்போது அங்கு நின்றிருந்த கர்ப்பிணி ஒருவரும் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் மற்றும் ஓட்டல் காவலாளி நாரயணசாமி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கர்ப்பிணி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.  இந்த பெரும்  விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

இனி பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.. மாநில அரசின் அசத்தல் திட்டம்..

Sat Sep 17 , 2022
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. “வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை கடந்த பட்ஜெட்டின் போது முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். இதை செயல்படுத்த, மாநில அரசு mahilawfh.rajasthan.gov.in ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, […]
Work From Home முறையை அதிகம் விரும்பும் இந்திய ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்..!!

You May Like