ஹரியானாவில் தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் கொதிகலனில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் ரேவாரியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் சிலர் டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நேற்று மாலை 5.50 மணியளவில் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ரேவாரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனை முதல்வர் சுரேந்திர யாதவ் கூறுகையில், பல தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு பெரிய விபத்து காரணமாக, ஹரியானாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரேவாரி சிவில் மருத்துவமனையில் குறைந்தது 23 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.