கடந்த சில நாட்களாக ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நீலகிரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த விபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில், தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூர்யா உள்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சற்று முன் வெளியான தகவல் படி ’சூர்யா 44’ படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் போது சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சூர்யாவிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சூர்யா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
Read More : சைவ பிரியர்களே இதை நோட் பண்ணிக்கோங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?