fbpx

தமிகழமே… இன்று மொத்தம் 19 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை…! உங்க மாவட்டம் இருக்கா…?

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 19 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

குழந்தைகள் தினம்... 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு...!

Tue Nov 14 , 2023
பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக ஜனவரி 2023 முதல் 6-9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு இதழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும் ஆசிரியர்களுக்காக “கனவு ஆசிரியர்” இதழ் பள்ளிக்கு ஒன்று என்ற விதத்திலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. இதே போன்று, ஜூன் 2023 முதல் 4,5 வகுப்பு மாணாக்கருக்காக “புது ஊஞ்சல் “ இதழ் […]

You May Like