fbpx

அடுத்த 3 மணி நேரம்.. மழை வெளுத்து வாங்க போகுது.. அதுவும் இந்த பகுதியில்..!! – வானிலை ஆய்வு மையம் வார்னிங்

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பருவமழை, வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Read more ; தவறான விளம்பரம்… பிரபல ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…!

English Summary

According to the Southern Meteorological Department, there is a possibility of light to moderate rain in the next 3 hours in 4 districts of Kanyakumari, Tirunelveli Tenkasi, and Thoothukudi.

Next Post

பத்தாம் வகுப்பு போதும்.. பாதுகாப்பு படையில் வேலை.. 69 ஆயிரம் சம்பளம்..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Mon Sep 2 , 2024
Indo-Tibetan Border Security Force has released a notification to fill up 819 constable posts. Here are the details including who can apply for these posts and how to apply.

You May Like