fbpx

திருக்குறளை கூறியபடி சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!… தொடர்ந்து ஒருமணி நேரம் சுற்றி உலக சாதனை படைத்து அசத்தல்!

தூத்துக்குடியில், குளோபல் உலக சாதனைக்காக ஒழுக்கம் குறித்த திருக்குறளைக் கூறியபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே ஒழுக்கம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி வேலவன் வித்தியாலயா பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 270 மாணவ மாணவியர் , 10க்கும் மேற்பட்ட சிலம்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் ’ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’என்ற திருக்குறளைக் கூறியபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பத்தைச் சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனையை குளோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது.தூத்துக்குடியைப் போன்று இலங்கையிலும் 80 பேர் இந்த சாதனையில் ஈடுபட்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதேபோன்று சாதனைகள் வரும் 19ஆம் தேதி மதுரை, மும்பை, சுவிசர்லாந்து, உள்ளிட்ட இடங்களிலும், 26ம் தேதி சென்னை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பகுதிகளிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி 133 அதிகாரம் 1330 குறள்களைப் போன்று மொத்தமாக 133 ஆசிரியர்களும் 1330 மாணவர்களும் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த சாதனை நிகழ்வை குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் நடத்தப்படுகிறது.

Kokila

Next Post

ஆரம்பமாகும் கோடை காலம்...! தமிழகத்தில் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்...!

Mon Feb 13 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக […]

You May Like