fbpx

தொழிலதிபர் கொலையில் பாலியல் தொழில் முகவர் கைது…இரண்டு பெண்களை அனுப்பாததால் தகராறு….கம்பியால் மண்டையில் அடித்து தீர்த்துகட்டினார்…

சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து பாலித்தீன் பையில் வீசிச்சென்ற கொலையாளியை போலீஸ் கைது செய்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் (67) சின்மயா நகர் பகுதியில் நேற்று காலை பாலித்தீன் பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் இவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் என்பதும் கட்டிடங்கள் அமைக்க வரைவு திட்டம் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் முன்பு திரைப்பட தயாராப்பாளராக இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீசார் கைது செய்த அந்த நபரின் பெயர் கணேசன். இவர் பாலியல் தொழில் தரகர் என கூறப்படுகின்றது. இவருடன் கடந்த இரண்டு ஆண்டுகள் பாஸ்கரனுக்கு தொடர்பு இருந்துள்ளது. கொலை சம்பவம் நடந்த அன்று இரவு இரண்டு பெண்களை கேட்டுள்ளார். அதற்கு கணேசன் மறுப்பு தெரிவித்து சற்று தாமதமாகும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன் கணேசனை தாக்கியுள்ளார். இருவருக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை ..

பாஸ்கரனுக்கும் கணேசனுக்கும் ஏற்பட்ட சண்டையில் பாஸ்கரன் கீழே விழுந்துள்ளார். அவரை தட்டி எழுப்பியபோது அவர் மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். அவரை கட்டிப்போட்டுவிட்டு இரும்புக்கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த பாஸ்கரனை பாலித்தீன் பையால் சுற்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து கூவம் பகுதியில் வீசிச் சென்றுள்ளார். விசாரணையின் போது இதை போலீசிடம் ஒப்புக் கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

சீனாவை நடுங்க வைக்கும் மிகப்பெரிய புயல்..! பயங்கர வேகத்தில் காற்று..! தொடர் கனமழை..!

Sun Sep 4 , 2022
சீனாவில் மிகப்பெரிய புயல் உருவாகியுள்ள நிலையில், அங்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயல் கிழக்கு சீனக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ”ஹின்னம்னோர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு நோக்கி கிழக்கு சீனக் கடலில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த ஹின்னம்னோர் புயல் சீனாவின் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என்று […]
சீனாவை நடுங்க வைக்கும் மிகப்பெரிய புயல்..! பயங்கர வேகத்தில் காற்று..! தொடர் கனமழை..!

You May Like