அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ்நாடு மக்கள் கட்சி வெளியேறுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் சிவராமன் அறிவித்துள்ளர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ்நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தமிழ்நாடு மக்கள் கட்சி அந்த கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இது குறித்து திருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிவராமன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆரம்பத்தில் பாஜகவை எதிர்ப்பது போல நடித்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
உண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் என்று நினைத்து நாங்கள் அவருடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதிமுகவின் போக்கு முழுக்க முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. பாஜகவை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்பவில்லை. இதுவரை எந்த பிரச்சாரங்களிலும் பாஜகவை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கள் கட்சி சார்பில் அதிமுகவிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களை உதாசீனப்படுத்தும் வகையில், நடந்து கொண்டனர். இதிலிருந்தே பாஜகவின் மறைமுக நண்பனாக அதிமுக செயல்பட்டு வருவது தெரிகிறது.
குறிப்பாக, பாஜகவின் பி டீமாக செயல்படும் அதிமுகவின் உண்மை முகம் வெளிவந்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ்நாடு மக்கள் கட்சி வெளியேறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவையும், பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரம் கட்சியும் தங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு பூவை ஜெகன் மூர்த்தி கேட்டார்.
ஆனால், புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் “அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்து அடுத்த தேர்தலில் கூடுதலாக பார்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்தனர். இதனால் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : ”கட்சிக்காக உழைப்பவர்களை மதிப்பதே இல்லை”..!! பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!!