fbpx

ஓலா, ஊபர், ரேபிடோ சேவைகளுக்கு அதிரடி தடை..!! அதிக கட்டணத்தால் பாய்ந்தது நடவடிக்கை..!!

பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் புக்கிங் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து ஆணையர் டிஎச்எம் குமார் கூறுகையில், ’கடந்த சில நாட்களாகவே ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். டாக்ஸி சேவை அளிக்கும் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. எனவே, சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.

ஓலா, ஊபர், ரேபிடோ சேவைகளுக்கு அதிரடி தடை..!! அதிக கட்டணத்தால் பாய்ந்தது நடவடிக்கை..!!

பொதுவாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 வரையில் வசூலிக்கப்படும் நிலையில், பெங்களூருவில் ஒன்று, இரண்டு கி.மீ. தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வாடிக்கையாளர்கள் புகார்களை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக தங்களுக்கு என பிரத்யேக செயலியை உருவாக்க பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

ஓலா, ஊபர், ரேபிடோ சேவைகளுக்கு அதிரடி தடை..!! அதிக கட்டணத்தால் பாய்ந்தது நடவடிக்கை..!!

ஆதார் திட்டத்தின் மூளையாக திகழும் நந்தன் நீலகென்னி நடத்தும் நிறுவனத்தின் துணையுடன் Namma Yatri App என்ற செயலியை நவம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. நாட்டின் நகரங்களில் முக்கிய அங்கமாக மாறிப்போன இந்த ஓலா, ஊபர் செயலிகளுக்கு பெங்களூரு போன்ற முன்னணி நகரத்திலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க… ’நடிகையை கடைக்குள் இழுத்து ஷட்டரை மூடிய ஊழியர்கள்’..!! சிம் கார்டு வாங்கச் சென்றபோது விபரீதம்..!!

Chella

Next Post

67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்..!! சிறந்த தமிழ் படம், நடிகர், நடிகை யார்..?

Sat Oct 8 , 2022
67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான நாமினேஷன் பட்டியலில் உள்ள தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்களை காணலாம். தேசிய விருதுகள் போன்று முக்கிய விருதாக கருதப்படுவது ஃபிலிம் ஃபேர் விருதுகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய திரைப்பட கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, […]
67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்..!! சிறந்த தமிழ் படம், நடிகர், நடிகை யார்..?

You May Like