fbpx

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்..!! விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம்..!!

விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்னை நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

அந்த வகையில், விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மொழி சிறுபான்மை பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலுடன் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் சான்றிதழில் அச்சிட்டு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

திமுக வட்டாரத்தில் பரபரப்பு...! மு.க.அழகிரி வழக்கில் இன்று தீர்ப்பு...!

Fri Feb 16 , 2024
2011ஆம் ஆண்டு தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவருமான மு.க.அழகிரி தொடர்பான வழக்கிலும் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரான அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் […]

You May Like