fbpx

ஆதார் கார்டில் அதிரடி மாற்றம்!… இந்த ரூல்ஸ் தெரியுமா?… இதுதான் கடைசி வாய்ப்பு!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. மக்கள் அனைவரும் இதை ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் கடன் வாங்குவதற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல, ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பதும் அவசியம். ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாது.

அப்படிப்பட்ட இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஆனால் பலருடைய ஆதார் கார்டில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்ய ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். அல்லது ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். ஆதார் கார்டில் முகவரி போன்ற விவரங்களை அவ்வப்போது மாற்றலாம். ஆனால் சில விஷயங்களை நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் மாற்ற முடியாது.

ஆதார் அமைப்பின் (UIDAI) விதிமுறைகளின் படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர் அந்த கார்டில் உள்ள பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும். அதாவது இதை செய்ய உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். எனவே கவனமாக மாற்ற வேண்டும். அடிக்கடி மாற்ற நினைக்கக் கூடாது. ஏனெனில், நிறையப் பேர் தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்கின்றனர். திருமணம் ஆனபிறகு குடும்பப் பெயர்களை மாற்றுபவர்களும் உண்டு.

அதேபோல, உங்கள் ஆதார் கார்டில் ஒருமுறை மட்டுமே உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியும். ஒருமுறை மட்டுமே இதைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அடுத்த முறை மாற்ற முடியாது. ஏனெனில், பிறந்த தேதி என்பது ஒருவருக்கு ஒன்று மட்டுமே. சிலர் கல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த நாள் தேதியை வைத்திருக்கலாம். ஆனால் அதை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்

Kokila

Next Post

100% உயிரை கொல்லும் புதிய கொரோனா மாறுபாட்டை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Thu Jan 18 , 2024
சீன விஞ்ஞானிகள் GX_P2V என்ற புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாட்டை உருவாக்கி கொண்டிருப்பதாகவும், இது ‘மூளையைத் தாக்கும்’ திறன் கொண்டது என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெய்லி மெயில் பத்திரிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ”சீன ராணுவத்துடன் தொடர்பில் உள்ள பெய்ஜிங் விஞ்ஞானிகள், பாங்கோலின் எனப்படும் கொறித்துண்ணிளில் காணப்படும் கோவிட் போன்ற வைரஸை குளோன் செய்து, அதை எலிகளின் உடலில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புதிய கொரோனா […]

You May Like