fbpx

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்..!! மதுப்பிரியர்கள் செம ஹேப்பி..!! என்ன தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த 15 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி, ஏற்காடு, பெரம்பலூர், கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப வழங்கினால் 10 ரூபாய் வழங்கும் சோதனை நடைபெற்றது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையொட்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உஷார்..!! இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Thu Nov 30 , 2023
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் 2ஆம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் […]

You May Like