சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுண்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையே எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கெர்லாபால் காவல் நிலைய எல்லைக்குள், நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதில், 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து நவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவையும் மீட்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார். நக்சல்கள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தாண்டு சத்தீஸ்கரில் மட்டும் நடந்த பல்வேறு என்கவுண்டர்களில் 132 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், பஸ்தர் பிரிவில் மட்டும் 116 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.