fbpx

’பட்டாசு ஆலைகள் மீது பாயும் நடவடிக்கை’..!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளிலும், ஆலைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 15 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், விரைவாகவும் பாதுகாப்பு இன்றியும் பட்டாசு தயாரிக்கின்றனர். சமீபகால உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் பட்டாசு உறுப்பத்திக்கு தடை விதிக்கப்படும் என்றும், ஆலைகள் மூடப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

Chella

Next Post

’இன்னும் உடல்நிலை சரியாகவில்லை’..!! ஜாமீன் கோரிய வழக்கில் செந்தில் பாலாஜி சொன்ன விஷயம்..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

Thu Oct 12 , 2023
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு […]

You May Like