இந்திய ரயில்வே துறை பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவையை அமல்படுத்தி வரும் நிலையில், பயணிகள் பலரும் தற்போது அதிகளவு ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ரயிலில் 60 வயது நிரம்பிய ஆண் பயணிகளுக்கு 40 சதவீதம் சலுகையும், 58 வயது நிரம்பிய பெண் பயணிகளுக்கு 50 சதவீதம் சலுகையும் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதில், மூத்த குடிமக்களுக்கான சலுகை அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் ரயில்வே சார்பில் வெளியிடப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.