fbpx

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!… நவ.15-க்குள் முடிக்கவேண்டும்!… பள்ளிக்கல்வித்துறை!

தமிழக பள்ளிகளுக்கான EMIS விவரங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற மெனுவை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிராக இருக்கும் குறியீடை கிளிக் செய்து Scholarship என்பதை திறந்து உதவித்தொகை குறித்த விவரங்களை சரிபார்த்து தேவையான சாதி சான்றிதழ் எண் மற்றும் வருமானவரி சான்றிதழ் என் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகளை வருகின்ற நவ.15.க்குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Kokila

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஒரு நாளைக்கு ரூ.520 ஊதியம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Mon Oct 23 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part Time Medical Consultant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் […]

You May Like