fbpx

அதிரடி…! ஊழல் செய்த 2,724 அதிகாரிகள் மீது நடவடிக்கை…!

2021-ஆம் ஆண்டின் 2,724 ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இவற்றில் 248 வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கண்காணிப்பு ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, 55 வழக்குகளில் உரிய அதிகாரிகள் இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம். துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகம், நிதி சேவைகள் துறை, ஜவுளி அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், உரத்துறை, அணுசக்தித்துறை, மின்சார அமைச்சகம், வர்த்தகத்துறை, இளைஞர் நலத்துறை, உயர்கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் இந்த வழக்குகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

மிரட்டிய கொரோனாவால் மிரண்டுபோன தாய், மகள்..!! 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சம்பவம்..!!

Thu Dec 22 , 2022
கொரோனா வைரஸுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த தாய், மகள் ஆகியோர் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி கே. சூரியபாபு. இவரின் மனைவி கே. மணி (44). இவரது மகள் துர்கா பவானி (20). கொரோனா காலத்தில் ஏற்பட்ட பயம் காரணமாகவும், தங்களை யாரேனும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தாலும், தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு […]
மிரட்டிய கொரோனாவால் மிரண்டுபோன தாய், மகள்..!! 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சம்பவம்..!!

You May Like