fbpx

சென்னை மத்திய குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கை….! செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்…..!

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு நடுவே அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றமே பிறப்பித்திருக்கிறது என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் தான் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக அவர் பொறுப்பு வகித்த போது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கில் வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி சரியான ஆவணங்களுடன் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது. இதனால் சிந்து பாலாஜிக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி நேரில் ஆஜராவதை தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சட்டத்தில் அதற்கு இடமும் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆகவே செந்தில் பாலாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பரவலாக எல்லோருமே அறிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதை செய்யப் போகிறார் என்று அனைவரும் உற்று கவனித்து வருகிறார்கள்.

Next Post

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…..! ஆளுநர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா….?

Fri Jun 30 , 2023
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]

You May Like