fbpx

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை!. வங்கதேச அரசு!

Sheikh Hasina: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீல் தாஜூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட 9 பேர் மீது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் விசாரணையை தொடங்கியது.

தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் தாஜூல் இஸ்லாம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ தீர்ப்பாயம் மீண்டும் கூடும் போது, ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வலியுறுத்துவோம். அதைத் தொடர்ந்து அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வங்கதேசம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

Readmore: சிவகார்த்திகேயன் ஒரு சுயநலவாதி..! கூலிப்படையால் உருவாக்கப்பட்டது..! வெளுத்து வாங்கிய பிரபலம்…

English Summary

Bangladesh Govt To Extradite Ex-PM Sheikh Hasina From India: ‘Necessary Steps Will Be Taken’

Kokila

Next Post

வங்கக்கடலில் வலுபெறும் புயல்!. இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!. தமிழகத்திற்கு பாதிப்பா?

Mon Sep 9 , 2024
Deep depression forming in Bay of Bengal; heavy rain alert issued for multiple states

You May Like